தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்

பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்

பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்


ADDED : ஜன 15, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலத்தில், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணி-யாளர் சங்கம் சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 6 முதல், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம், அரசுடன் நடந்த பேச்சுக்கு பின், அனைவரும் நேற்று, பணிக்கு திரும்பினர்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட சங்க தலைவி சரிதாசெல்வி கூறிய-தாவது:அரசுடன் நடந்த பேச்சில் திருப்தியால், மாநில பொதுக்குழு, செயற்குழு முடிவின்படி, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்-கையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். மீதி கோரிக்கைகளுக்கு உறுதி அளித்து, படிப்படியாக நிறைவேற்-றப்படும் என நம்புகிறோம். இதனால் மாவட்டத்தில், 1,642 பணியாளர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். அரசின் நடவடிக்-கையை பொறுத்து, எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us