/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
/
கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
ADDED : அக் 16, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார், கல்பகனுாரில், புதன் சந்தை எனும் கால்நடை சந்தை நேற்று கூடியது.
தீபாவளி நெருங்கிய நிலையில், நாட்டு வகை வெள்ளாடு, கறுப்பு ஆடு, தலைச்சேரி, செம்மறி, போயர் உள்பட, 400க்கும் மேற்பட்ட ஆடுகள், நாட்டு வகை உள்பட, 500க்கும் மேற்பட்ட மாடுகளை, விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்தனர். 200க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் கொண்டு வந்தனர். இதன்மூலம், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.