ADDED : டிச 22, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: ஐயப்ப சீசனால், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்-தைக்கு, சில வாரங்களாக ஆடுகள் வரத்து சரிந்திருந்தது. நேற்று கூடிய சந்தைக்கு, கடந்த வாரத்தை விட ஆடுகள் வரத்து சற்று அதிகரித்து, 2,600 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள் கொண்டுவந்தனர். 10 கிலோ ஆடு, 6,750 முதல், 7,200 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.75 கோடி ரூபாய்க்கு விற்-பனை நடந்தது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''ஐயப்ப சீசனால் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்து வந்த நிலையில், இந்த வாரம் வளர்ப்பு ஆடுகள் வரத்து, விற்பனை சற்று அதிகரித்தது,'' என்றார்.