ADDED : ஜன 17, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
ஓமலுார் : சேலம் - சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்க, கேரளாவை சேர்ந்த 'அல்ஹிண்ட் ஏர்' நிறுவனத்துக்கு, 'உடான்' அல்லாத திட்டத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சேலம் விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் கூறுகையில், ''கடந்த மாதம், 'இண்டிகோ' நிறுவன பைலட் பிரச்னையால், நாடு முழுதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில், ஏற்கனவே அனுமதி கோரியிருந்த, அல்ஹிண்ட் ஏர் நிறுவனத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. அந்த நிறுவனம் காலை நேரத்தில், சேலம் - சென்னைக்கு விரைவில் விமானத்தை இயக்கவுள்ளது,'' என்றார்.
