/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் அகரம் இலக்கிய மன்ற பொன் விழா கொண்டாட்டம்
/
சேலம் அகரம் இலக்கிய மன்ற பொன் விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 13, 2025 05:37 AM
சேலம்: சேலம் அகரம் இலக்கிய மன்றத்தின், 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம், அன்னதானப்பட்டி அகர மகாலில் நடந்தது. அதன், 3ம் நாள் நிகழ்ச்சிக்கு, ஸ்ரீமான் பழனிவேல், செல்வராஜ், காந்தி தலைமை வகித்தனர். கந்தசாமி முன்னிலை வகித்தார்.
அதில் சங்க முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள், உறுப்பினர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து துறைகளை சார்ந்தவர்களை பாராட்டி, பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பின் திருவள்ளுவர் சிலையை பரிசாக பெற்ற, தேசிய சமூக இலக்-கிய பேரவை மாநில தலைவர் குமரவேலு பேசியதாவது:மதுரை கலெக்டராக இருந்த ஹாரிங்டனிடம் சமையல்காரராக இருந்தவர் கந்தப்பன். அவரிடம் அடுப்பெரிக்க கொடுத்த ஒரு கட்டு ஓலைச்சுவடி, சந்தனம், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. அதை அடுப்பெரிக்க மன-மின்றி, கலெக்டரிடம் கொடுக்க, அவர், சென்னை கலெக்டராக இருந்த எல்லீஸ்துரைக்கு அனுப்ப, அவர் அதை, 'திருக்குறள்' என கண்டறிந்து, 1812ல், தமிழ், ஆங்கிலத்தில் நுாலாக்கி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நாள் நிகழ்வில் இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்-மையின் முன்னாள் ஆலோசகர் திருப்புகழ், 'நட்பு' தலைப்பிலும், 2ம் நாள் நிகழ்வில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, 'இலக்கியத்தில் இன்பச்சாரல்' தலைப்பிலும் பேசினர். செயலர் செல்வராஜ், பொருளாளர் அன்புவேல், அகர மகால் பொறுப்பாளர்கள், சமூக
ஆர்வலர்கள், மக்கள் பங்கேற்றனர்.