/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசுக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து; சேலம் உதவி சிறை அலுவலர் 'சஸ்பெண்ட்'
/
போலீசுக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து; சேலம் உதவி சிறை அலுவலர் 'சஸ்பெண்ட்'
போலீசுக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து; சேலம் உதவி சிறை அலுவலர் 'சஸ்பெண்ட்'
போலீசுக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து; சேலம் உதவி சிறை அலுவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 07, 2025 07:46 AM
சேலம் : மேட்டூர், காவேரி பாலத்தை சேர்ந்தவர் பூவரசன், 28. இவரிடம் கடந்த, 4ல், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 30, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, 700 ரூபாயை பறித்துச்சென்றார். இதுகுறித்து பூவரசன் புகார்படி, மேட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து, ராமச்சந்திரனை தேடினர். மேட்டூர், சீதாமலை தொடர் பகுதியில் இருந்த அவரை பிடிக்க, போலீசார் சென்றபோது தவறி விழுந்ததில் ராமச்சந்திரனுக்கு கால் முறிந்தது. பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை சிறை கணக்கில் எடுத்துக்கொள்ள போலீசார் விடுத்த கோரிக்கைப்படி, சேலம் உதவி சிறை அலுவலர் ரிஷிகேஷ் வைகுந்த் சிங், 50, நேற்று ராமச்சந்திரனிடம் விசாரித்தார். அப்போது அவர், 'போலீசார் தாக்கியதாக கூறினால் நிவாரணம் பெற்றுத்தரப்படும்' என்றார்.இதையடுத்து சிங், போலீசார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்துக்கு புகார் சென்றது. துறை ரீதியாக விசாரணை நடந்தது. பின் ரிஷிகேஷ் வைகுந்த் சிங்கை, 'சஸ்பெண்ட்' செய்து, கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.
ரவுடிக்கு 'கட்டு'
போலீசார் ராமச்சந்திரனை விரட்டியபோது, வேகமாக ஓடிய அவர், தடுக்கி விழுந்ததில் இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. அவரை பிடித்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காலில் கட்டு போடப்பட்டுள்ளது. அவர் மீது மேட்டூர் நகராட்சியின், தற்போதைய, 14வது வார்டு கவுன்சிலர் வெங்கடாசலத்தை கொல்ல முயன்றது, கொளத்துாரில் வீடு புகுந்து நகை திருடிய வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.