sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இழப்பீடு வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி

/

இழப்பீடு வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி


ADDED : டிச 13, 2024 09:06 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ரயில் பாதை திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு, 22 ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்கப்படாததால், சேலம் கலெக்டர் அலுவல-கத்தில் கணினி, பீரோ உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.

சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டத்துக்கு, சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த கருமலை, வெங்கடேஷ் உள்பட, 17 குடும்பத்தின-ரிடம், 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்-கப்பட்டது. ஆனால் வழங்காமல் இழுத்தடிக்கப்-பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள், சேலம், 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்-தனர். விசாரித்த நீதிபதி, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் உத்தரவிட்டு, 22 ஆண்டு-களாகியும், இதுவரை இழப்பீடு வழங்கப்பட-வில்லை.

இதனால் நேற்று, ஜோசப், இந்திரா, வினோத், சர-வணன், கலாவதி உள்ளிட்ட நீதிமன்ற அமீ-னாக்கள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) அறையில் உள்ள தலைமை உதவியாளர் பி பிரிவு அதிகாரி நாகூர் மீராஸிடம், ஜப்தி செய்ய வந்ததாக, தெரிவித்தனர். உயர் அதிகாரி-களிடம் தெரிவித்து இழப்பீடு வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார். ஆனால் அமீனாக்கள், நீதி-மன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்படுவதாக, கணினி, பீரோ, நாற்காலி, மேஜை, மின்விசிறி உள்பட அலுவலகத்தில் இருந்த தளவாட பொருட்கள் அனைத்தையும் ஜப்தி செய்தனர். தொடர்ந்து அப்பொருட்களுக்கு மதிப்பீடு செய்-தனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கருமலை கூறு-கையில், ''ரயில் பாதை திட்டத்துக்கு நிலம் கைய-கப்படுத்தப்பட்டு, 22 ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்கவில்லை. வாழ வழியின்றி, குழந்தை-களை படிக்க வைக்க கூட முடியாமல் அவதிப்-பட்டோம். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், இத்-தனை ஆண்டுகள் மாவட்ட நிர்வாகம் எங்களை அலைக்கழித்தது. இதனால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டோம். இனியாவது எங்களுக்குரிய தொகையை வழ ங்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us