/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் தொகுதி வேட்பாளர் பா.ஜ., நிர்வாகிகள் பரிந்துரை
/
சேலம் தொகுதி வேட்பாளர் பா.ஜ., நிர்வாகிகள் பரிந்துரை
சேலம் தொகுதி வேட்பாளர் பா.ஜ., நிர்வாகிகள் பரிந்துரை
சேலம் தொகுதி வேட்பாளர் பா.ஜ., நிர்வாகிகள் பரிந்துரை
ADDED : மார் 06, 2024 06:45 AM
பனமரத்துப்பட்டி : கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள, சேலம் பா.ஜ., லோக்சபா தொகுதி அலுவலகத்தில், வேட்பாளர் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் லோக்சபா தொகுதி அமைப்பாளர் அண்ணாதுரை, இணை அமைப்பாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.
அதில் மண்டல தலைவர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகளிடம், 'வேட்பாளர் கருத்து கேட்பு கூட்டம்' எனும் படிவம் வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள, 3 வேட்பாளரின் பெயர், கட்சி பொறுப்பு ஆகியவற்றை எழுதி வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், வேட்பாளர் பெயர்களை பரிந்துரை செய்தனர். பூர்த்தி செய்த படிவத்தை, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், ராணிப்பேட்டை மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோரிடம் வழங்கினர். சேலம் மாநகர் தலைவர் சுரேஷ்பாபு, வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், இணை பொறுப்பாளர் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

