ADDED : பிப் 25, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மாவட்ட வன அலுவலராக பணியாற்றிய காஷ்யப் ஷஷாங் ரவி, நீலகிரி மாவட்ட வன அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்தில், பசுமை தமிழ்நாடு மிஷன் உதவி இயக்குனராக பணிபுரிந்த அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ், சேலம் மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் உள்பட தமிழகத்தில், 15 மாவட்ட வன அலுவலர்களை இடமாற்றம் செய்து, கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா ஷாஹூ உத்தரவிட்டுள்ளார்.
