/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கோட்டத்துக்கு 6 விருதுகள் ரயில்வே வார விழாவில் வழங்கல்
/
சேலம் கோட்டத்துக்கு 6 விருதுகள் ரயில்வே வார விழாவில் வழங்கல்
சேலம் கோட்டத்துக்கு 6 விருதுகள் ரயில்வே வார விழாவில் வழங்கல்
சேலம் கோட்டத்துக்கு 6 விருதுகள் ரயில்வே வார விழாவில் வழங்கல்
ADDED : அக் 08, 2025 01:39 AM
சேலம் :சேலம் ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, 6 பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே சார்பில், சென்னையில், 70வது ரயில்வே வார விழா நேற்று நடந்தது. அதில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, சிறந்த மின்திறன், செக்யூரிட்டி, பாதுகாப்பு திறன், சிறந்த ஸ்டோர், சிறப்பான பராமரிப்பு மின்சார லோகோ ெஷட், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய, 6 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, கேடயம் வழங்கப்பட்டது.
அவற்றை, தெற்கு ரயில்வே மேலாளர் சிங் வழங்க, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் பெற்றுக்கொண்டார். மேலும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட, 13 பணியாளர்களுக்கு, சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. பிரிவுகள், பணியாளர்களை, கோட்ட மேலாளர் பன்னாலால் பாராட்டினார்.