/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம்-ஈரோடு 'மெமு' ரல் சேவை நேற்று துவங்கியது
/
சேலம்-ஈரோடு 'மெமு' ரல் சேவை நேற்று துவங்கியது
ADDED : நவ 25, 2025 02:26 AM
சேலம், :சேலம்-ஈரோடு பயணிகள் ரயில் சேவை, நேற்று முதல் தொடங்கியது.
சேலம்-ஈரோடு இடையே பயணிகள் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், நேற்று முதல் சேலம்-ஈரோடு மெமு பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.வியாழன் தவிர்த்து மற்ற நாட்களில் காலை, 6:15 மணிக்கு சேலத்தில் கிளம்பி, 7:25 மணிக்கு ஈரோடு ஜங்ஷன் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஈரோடு-சேலம் மெமு பயணிகள் ரயில், வியாழன் தவிர்த்து மற்ற நாட்களில், இரவு, 7:30 மணிக்கு கிளம்பி சேலம் ஜங்ஷனுக்கு, 8:45 மணிக்கு வந்து சேரும். இதில், 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 6:15 மணிக்கு சேலம் ஜங்ஷனிலிருந்து கிளம்பிய சேலம்-ஈரோடு பயணிகள் ரயிலை, நிலைய மேலாளர் கோபேஷ்காந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

