/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில அளவில் தடகள போட்டி சேலம் விடுதி மாணவர்கள் அசத்தல்
/
மாநில அளவில் தடகள போட்டி சேலம் விடுதி மாணவர்கள் அசத்தல்
மாநில அளவில் தடகள போட்டி சேலம் விடுதி மாணவர்கள் அசத்தல்
மாநில அளவில் தடகள போட்டி சேலம் விடுதி மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 02, 2025 01:22 AM
சேலம், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் குடியரசு தின விளையாட்டு தடகள போட்டி, தஞ்சாவூரில் நடக்கிறது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சேலம் விடுதியில் பயிற்சி பெற்று வரும், அரசு உதவி பெறும் சாரதா வித்யாலயா பள்ளி மாணவி மகாலட்சுமி, 19, கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் தங்கம், கனிஷ்காஸ்ரீ, 17, வெள்ளி வென்றார். அதே பள்ளி மாணவி தன்ஷிகாஸ்ரீ,17, உயரம் தாண்டுதலில், வெள்ளி வென்றார்.
அதே போட்டியில், அரசு உதவி பெறும், சேலம், பாரதி வித்யாலயா பள்ளி மாணவர் கிருஷ்சாந்த், 19, மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலம், தனியார் பள்ளி மாணவர் சுதர்சன், 17, என்பவர், 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர்களை, பயிற்சியாளர் இளம்பரிதி, பள்ளி
ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.