தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காண்பேன் சேலம் மேற்கு பா.ம.க., வேட்பாளர் உறுதி

அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காண்பேன் சேலம் மேற்கு பா.ம.க., வேட்பாளர் உறுதி

அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காண்பேன் சேலம் மேற்கு பா.ம.க., வேட்பாளர் உறுதி


ADDED : ஏப் 17, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தேசிய ஜனநாயக கூட்டணியின், சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க., வேட்பாளர் கார்த்தி, மாநகராட்சி பகுதிக்குட்பட்ட, 3, 23, 25வது வார்டுகளில் பிரசாரம் மேற்கொண்டார். ரெட்டியூர் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை மேற்-கொண்ட அவர், சிவாய நகர், நகரமலை அடிவாரம், கோம்பைக்-காடு, சாமிநாதபுரம், கோடிபள்ளம், திருவாக்கவுண்டனுார், நெடுஞ்சாலை நகர், முல்லை நகர் உள்பட, 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் வெற்றி பெற்றதும், மக்-களின் கோரிக்கையை ஏற்று மேற்கு தொகுதியில் மாநகராட்சியில் பகுதிகளில் முழு கவனம் செலுத்தி அனைத்து அடிப்படை வசதிக-ளுக்கும் தீர்வு காண்பேன். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறிய, ரேஷன் கார்டுக்கு, 10,000, உள்ளிட்டவை கிடைக்க நடவ-டிக்கை எடுக்கப்படும். ஒரு முறை வாய்ப்பு தந்து மாம்பழ சின்-னத்துக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.,வின், மாநகர் மாவட்ட செய லர் பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்ராஜ், பகுதி செயலர் அசோக், மாரி-யப்பன், பசுமை தாயக மாநில இணை செயலர் சத்ரியசேகர், பா.ஜ., மாவட்ட தலைவர் சசிகுமார், அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் அண்ணாதுரை பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us