ADDED : செப் 09, 2026 06:05 AM
சேலம்;ஒடிசாவின்
சம்பல்பூர் - போத்தனுார் இடையே சிறப்பு வார ரயில்
இயக்கப்படுகிறது.
அதன்படி இன்று முதல் வரும் நவ., 25 வரை,
புதன்தோறும் காலை, 11:35 மணிக்கு சம்பல்பூரில் புறப்பட்டு, வெள்ளி
அதிகாலை, 1:30 மணிக்கு போத்தனுாரை அடையும். இது வியாழன் அன்று மாலை,
6:18க்கு ஜோலார்பேட்டை, இரவு, 8:00 மணிக்கு சேலம், 9:15க்கு ஈரோடு,
10:00 மணிக்கு திருப்பூரில் நின்று செல்லும்.மறுமார்க்க ரயில்,
வரும், 11 முதல், நவ., 27 வரை, வெள்ளிதோறும் மதியம், 1:00 மணிக்கு
போத்தனுார் சந்திப்பில் புறப்பட்டு, சனி இரவு, 11:15 மணிக்கு
சம்பல்பூரை அடையும். இது வெள்ளி மதியம், 1:55க்கு திருப்பூர், 2:50க்கு
ஈரோடு, 3:55க்கு சேலம், மாலை, 5:58க்கு ஜோலார்பேட்டை ஸ்டேஷன்களில்
நின்று செல்லும்.
மேலும், பர்கர் சாலை, பலங்கிர், திட்லாகர், கேசிங்க,
முனிகுடா, ராயகடா, பார்வதிபுரம், பொப்பிலி, விஜயநகரம்,
கொத்தவலசா, துவ்வாடா, அனகாபல்லே, குடிவாலா நெல்லுார், கூடூர்
உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
