/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தன மரம் வளர்ப்பு: வேளாண் துறை அறிவுரை
/
சந்தன மரம் வளர்ப்பு: வேளாண் துறை அறிவுரை
ADDED : டிச 26, 2024 03:00 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகா-யினி அறிக்கை:சந்தன செடிகள், துணை செடிகளின் உதவி இல்லாமல் வளராது. இதனால் சந்தன செடியை மையமாக வைத்து புதர் உருவாக்-கினால் வேகமாக வளர உதவி புரியும். சந்தன செடியை சுற்றி மும்முனை துணை செடிகள் நடவு செய்ய வேண்டும். முதல் நிலையில் பொன்னாங்கன்னி கீரை, இரண்டாம் நிலையில் அகத்தி அல்லது துவரை செடிகள், இறுதியாக சவுக்கு மரங்களை நட வேண்டும்.
புதர் உருவாக்க முதலில் நடவு குழியில் சந்தன நாற்றுடன் பொன்-னங்கன்னி கீரையையும் சேர்த்து நட வேண்டும். அகத்தி செடி-களை குழிக்கு கிழக்கு, மேற்கு திசைகளிலும், துவரை செடியை தெற்கு, வடக்கு திசைகளிலும் நடவு செய்ய வேண்டும். இறுதி-யாக குழியில் இருந்து, 1 அடி தள்ளி சவுக்கு மரத்தை நட வேண்டும்.சந்தன மரத்துடன் வளரும் துணை செடிகளை, 6 மாதங்களுக்கு பின், அவற்றின் உயரத்தை குறைத்து சூரிய வெளிச்சம், சந்தன மரம் மீது முழுதும் படும்படி கவாத்து செய்ய வேண்டும். அதேபோல் கழுத்தளவு உயரம் வளரும் வரை, கவாத்து செய்தால் மரம் நன்றாக வளரும்.சந்தன மரங்களின் ஆரம்ப கட்டத்தில் பக்க கிளைகள் அதிகம் தோன்றும். அவற்றை மர வளர்ச்சிக்கேற்ப தண்டுப்பகுதி நேராக வளரும்படி வெட்டி கவாத்து செய்ய வேண்டும். 10 கிளைகள் இருந்தால், 2ஐ கவாத்து செய்ய வேண்டும். இப்படி, 10 முதல், 12 அடி உயரம் வளரும் வரை, இரு கிளைகளை மட்டும் முறையாக கவாத்து செய்து வந்தால் மரங்கள் வேகமாக வளர்வதோடு தண்-டுப்பகுதி அதிகரித்து நல்ல மகசூல் கிடைக்கும்.