தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் சங்ககிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் சங்ககிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் சங்ககிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி


ADDED : ஏப் 14, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி, சேலம் மாவட்டம், சங்ககிரி சட்ட சபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேல், நேற்று தாரமங்கலம் தெற்கு ஒன்றியம், குருக்குபட்டி, பவளத்தானுார், கந்தரையான்காடு, லட்சுமாயூர், அணைமேடு, பள்ளிகொண்டான்பாறை, கரட்டுக்காடு, பெரியபட்டி, கீழ்மாட்டையாம்பட்டி, சேவான்வளவு, சாணாங்காடு, தொப்பப்பட்டி, சின்னபிள்ளையூர், கொண்டகாரனுார், மேட்டுபாளையம், துட்டம்பட்டி, துட்டம்பட்டி பைபாஸ், கோமாளியூர், தெசவிளக்கு கூடாரமேடு உள்ளிட்ட 54 பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேல் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க, நீங்கள் சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட வேண்டும். பழனிசாமி முதல்வரானவுடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சங்ககிரி தொகுதியில் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க., தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலர் செங்கோடன், தாரமங்கலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சின்னகண்ணு, பா.மக., ஒன்றிய செயலர் சேட்டு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித், சேகர் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us