தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெட்ரோல் ஊற்றி தீ வைத்து துாய்மை பணியாளர் தற்கொலை

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து துாய்மை பணியாளர் தற்கொலை

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து துாய்மை பணியாளர் தற்கொலை


ADDED : அக் 01, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்தவர் உசேன், 24. மாநகராட்சியில் துாய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார். இவரது மனைவி சுகந்தி, 23. தள்-ளுவண்டியில் டிபன் கடை

நடத்துகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்க-ளுக்கு, 3 வயதில் மகன் உள்ளார்.

உசேனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். அதன்படி கடந்த செப்., 22 இரவு தகராறில் ஈடுபட்டார். அப்போது மனைவி, 'நீ வேண்டாம்' என கூறினார். இதில் வேதனை அடைந்த உசேன், அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்-தினம் உயிரிழந்தார். கிச்சிப்

பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

2 குழந்தைகளின் தாய்

தாரமங்கலம், கீழ் சின்னா

கவுண்டம்பட்டியை சேர்ந்த, ஓட்டல் தொழிலாளி ராஜி, 32. சேலம், களரம்பட்டியை சேர்ந்தவர் மோனிஷா, 24. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு

குழந்தைகள் உள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்-தினம், ராஜி சேலம் நீதிமன்றம் சென்றார்.

அன்று மாலை மோனிஷா, கணவருக்கு வீடியோகால் செய்தார். அப்போது, கழுத்தில் சேலையால் முடிச்சு போட்டுக்கொண்டு, 'நீ வருவாயா, வர மாட்டாயா' என கேட்டுள்ளார். ராஜி, 'வந்து கொண்டிருக்கிறேன்' என கூறினார். அதற்கு மோனிஷா, 'நீ வந்து பாரு' என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து ராஜி, மோனிஷாவின் அண்ணன் விக்னேஷிடம் போன் செய்து தெரிவித்துள்ளார். அவரும் மோனிஷாவுக்கு போன் செய்து, 'நீ எதுவும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்-ளலாம்' என கூறியுள்ளார்.

ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த ராஜி, விக்னேஷூக்கு தகவல் கொடுத்தார். அவர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சமையல் அறை மேற்கூரை இரும்பு பைப்பில், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us