ADDED : ஜூன் 09, 2026 03:04 AM
தாரமங்கலம்; தாரமங்கலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்ப-டையில், 52 துாய்மை பணியாளர்கள் பணிபுரி-கின்றனர். திருச்சியை சேர்ந்த அவர்களின் ஒப்-பந்த நிறுவனம், முறையாக சம்பளம் வழங்-காமல் பி.எப்., முறையாக பிடிப்பதில்லை என கடந்த மே, 13ல் நகராட்சி அலுவலகம் முன் காத்-திருப்பு போராட்டம் செய்தனர்.
அன்று மாலைக்குள் ஒப்பந்த நிறுவனம் சம்பளம், பி.எப்., வழங்குவதாக கூறி, சம்பளம் வழங்கி-யதால் சென்றனர். தொடர்ந்து மறுநாள் பி.எப்., கேட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். நகராட்சி கமிஷனர் பேசியதால் பணிக்கு சென்றனர். அதேபோல் பணியாளர்கள் பி.எப்., - இன்சூரன்ஸ் தொகை மற்றும் அரசு வழங்கிய சம்பள உயர்வு கேட்டு நகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அங்குவந்த ஒப்பந்த நிறுவன மேலாளர் சம்பள உயர்வை வழங்குவதாகவும், 10 நாட்களுக்குள் பி.எப்., தொகை செலுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறி-யதால் காலை, 10:00 மணிக்கு மேல் பணிக்கு சென்றனர்.
