ADDED : ஆக 15, 2026 05:07 AM
ஆத்துார்; காங்., சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்-துாரில் உள்ள காந்தி சிலை முன், சத்தியாகிரக போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை
வகித்தார்.
அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த, 8ல், காங்., தலைவர் மல்லிகார்ஜூனகார்கே பேசிய மேடையில், 'கங்கை நீரால் சுத்திகரிப்பு' பெயரில் ஹிந்து அமைப்பினர் அவமானப்படுத்திய செய-லுக்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, 'தீண்டாமை செயலை வன்மையாக கண்டிக்-கிறோம்' என, கோஷம் எழுப்பினர். மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று கண்டன பேரணி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பழனி-சாமி தொடங்கிவைத்தார்.
மாவட்ட தலைவர் ரத்தினவேலு தலைமை வகித்தார். தினசரி சந்தை, சின்னபார்க், கிழக்கு பிரதான சாலை வழியே சென்ற பேரணி, சதுரங்-காடி காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. மாவட்ட முன்னாள் தலைவர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர்
பங்கேற்றனர்.
