மின்னல் தாக்கி பள்ளி கட்டடம் சேதம் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
மின்னல் தாக்கி பள்ளி கட்டடம் சேதம் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
ADDED : ஜூன் 18, 2026 04:38 AM

கெங்கவல்லி; கெங்கவல்லியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாண-வர்கள் படிக்கின்றனர். அங்கு, 2017 - 18ல், 'நபார்டு' திட்டத்தில், 14 வகுப்பறைகள் அடங்கிய புது கட்-டடம் கட்டப்பட்டது. நேற்று மதியம், 3:30 முதல், 4:30 மணி வரை, கெங்கவல்லியில் இடி, மின்ன-லுடன் மழை பெய்தது.
அப்போது, அந்த புது கட்டட மேற்புற பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. உடனே சுதாரித்த ஆசிரியர்கள், வகுப்-பறைக்குள் இருந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்-களை, பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து கட்டட சேதம் குறித்து, பள்ளி கல்வித்துறை அதி-காரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.ஏற்காடில் கனமழை
ஏற்காடில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. இரவு, 7:00 மணி முதல், ஏற்-காடு, அதன் சுற்றுப்பகுதியில் இடி சத்தத்துடன் மின்னல் தென்பட்டது. தொடர்ந்து, 7:55 மணிக்கு, கனமழை பெய்ய தொடங்கி, 8:40 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. அதேபோல் வாழப்-பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், சிங்கிபுரம், பழனி-யாபுரம், அத்தனுார்பட்டி, துக்கியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்-தது.
