/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாததால் பள்ளி தாளாளருக்கு 28 நாள் சிறை தண்டனை
/
காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாததால் பள்ளி தாளாளருக்கு 28 நாள் சிறை தண்டனை
காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாததால் பள்ளி தாளாளருக்கு 28 நாள் சிறை தண்டனை
காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாததால் பள்ளி தாளாளருக்கு 28 நாள் சிறை தண்டனை
ADDED : ஜூலை 11, 2025 02:04 AM
கெங்கவல்லி, காசோலை மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், தனியார் பள்ளி தாளாளருக்கு, 28 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல், கிழக்குராஜாபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 52. கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்தவர் கஜேந்திரன், 52. இவர்கள் ஆணையாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராக இருந்தனர். கதிர்வேல், தாளாளராகவும் இருந்தார்.
பள்ளியின் பங்குதாரர் தொடர்பாக கஜேந்திரனுக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலையை, கதிர்வேல் வழங்கினார். வங்கியில் செலுத்தியபோது பணமின்றி திரும்பியது. இதுகுறித்து கஜேந்திரன் புகார்படி, ஆத்துார் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் கதிர்வேல் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
கடந்த ஜூன், 24ல், மாஜிஸ்திரேட் மோகனசுந்தரம் விசாரித்தார். அப்போது கதிர்வேலுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் கதிர்வேல் ஆஜரானார். அப்போது, 'நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதால், 28 நாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அதற்கு பின் நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்குக்கு தீர்வு காணவேண்டும்' என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து கெங்கவல்லி போலீசார், கதிர்வேலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, மருத்துவ சான்று பெற்றனர். பின் அவரை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.