/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீச்சல் பழகியபோது பள்ளி மாணவர் பலி
/
நீச்சல் பழகியபோது பள்ளி மாணவர் பலி
ADDED : மே 16, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆட்டையாம்பட்டி, லட்சுமனுாரை சேர்ந்த, சதீஷ்குமார் மகன் கிேஷார், 12. இவருக்கு அதே பகுதியில் உள்ள கிணற்றில், நேற்று முன்தினம் பெற்றோர் நீச்சல் கற்றுக்கொடுத்தனர். அப்போது அதிகளவில் தண்ணீரை குடித்த சிறுவன் மூழ்கினான்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதனை செய்து பார்த்தபோது, ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சிறுவன், வீரபாண்டியில் உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான்.