தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ள்ளி மாணவ, மாணவியர் நுாலக உறுப்பினராக உதவி

ள்ளி மாணவ, மாணவியர் நுாலக உறுப்பினராக உதவி

ள்ளி மாணவ, மாணவியர் நுாலக உறுப்பினராக உதவி


ADDED : நவ 27, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய நுாலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை வகித்தார். அதில் ஆத்துார் முழு நேர கிளை நுாலகத்தில், 500 மாணவியர் உறுப்பினராக சேர, 15,500 ரூபாயை, முதல்நிலை நுாலகர் அழகுவேலிடம், ஆத்துார் ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் வழங்கினர். வாசகர் வட்ட தலைவர் மாதேஷ்வரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.அதேபோல் நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தார். அதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாரதி, 50 மாணவ, மாணவியர், அப்பமசமுத்திரம் ஊர்புற நுாலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கான உதவித்தொகையை வழங்கினார். ஆத்துார் முதல் நிலை நுாலகர் அழகுவேல், ஊர்புற நுாலகர் லாவண்யா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us