/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாட்ஸாப் குழுக்கள் 'ஹேக்' பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி
/
வாட்ஸாப் குழுக்கள் 'ஹேக்' பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி
வாட்ஸாப் குழுக்கள் 'ஹேக்' பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி
வாட்ஸாப் குழுக்கள் 'ஹேக்' பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 15, 2025 01:02 AM
கெங்கவல்லி;வாட்ஸாப் குழுக்கள், 'ஹேக்' செய்யப்பட்டதால், கெங்கவல்லி ஒன்றிய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்ற, இரு வாட்ஸாப் குழுக்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, அலுவலகம் தொடர்பான முக்கிய தகவல்கள்
பகிரப்படுகின்றன.
ஆனால் அந்த குழுக்கள், நேற்று முன்தினம் இரவு, 7:20 மணிக்கு, 'ஹேக்' செய்யப்பட்டன. குழுக்களின் பெயர்களும், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' என்ற பெயரில் தானாக மாற்றம் அடைந்தன. மேலும் குழுவில் இருந்த ஒருவரது மொபைல் போனில் இருந்து, அவருக்கு தெரியாமலே வந்த ஒரு செய்தியில், 'ஆதார்' பெயரில் லிங்க், வங்கி பெயர், போலியாக
பகிரப்பட்டிருந்தன.
இதனால் ஆசிரியர்கள் அனைவரையும், அக்குழுக்களில் இருந்து உடனே வெளியேற, கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர் அறிவுறுத்தினார். அதன்படி அனைவரும் வெளியேறினர்.
மேலும், வங்கி, ஆதார் பெயரில் வந்த, 'லிங்க்'கை யாரும் தொடவேண்டாம் என்ற செய்தியும் பரவியது. அந்த குழுக்களில், 140க்கும் மேற்பட்டோர் இருந்ததும், அவர்களது சம்பளத்தொகை, ஹேக்கர்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளதா என, ஆசிரியர்கள் இடையே அச்சம்
ஏற்பட்டுள்ளது.