தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2ம் நாள் தேரோட்டம்

2ம் நாள் தேரோட்டம்

2ம் நாள் தேரோட்டம்


ADDED : மே 02, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்-திரை தேர் திருவிழா, கடந்த மாதம், 22ல் கொடி-யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம், 4 நாள் தேரோட்டம் தொடங்கியது. அதில் முதல் தேரில் விநாயகர், இரண்டாம் தேரில் தேவகிரி அம்மனுடன் நஞ்சுண்டேஸ்வரர், 3ம் தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வலம் வந்-தனர். தொடர்ந்து சின்னமாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டது.

அதன், 2ம் நாளான நேற்று, சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அங்கிருந்த புறப்பட்ட தேர், அங்காளம்மன் கோவில் தெரு வழியே சென்று மேட்டுமாரியம்மன் கோவில் அருகே, 3 தேர்-களும் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து, 3ம் நாள் தேரோட்டம், இன்று நடக்கிறது.

அன்னக்கொடி திருவிழா

நரசிங்கபுரம் ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவிலில், நேற்று, 95ம் ஆண்டு அன்னக்கொடி திருவிழா-வுக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிவ பெருமான் சிலை அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு வந்தனர். அப்போது சிறுவர்கள் சிலர், சிறுதொண்டன், திரு-வெண்காட்டு நங்கை, செல்வன் சீராளன், பார்-வதி, பரமசிவம் ஆகிய வேடமிட்டு வந்தனர். அவர்களிடம் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்றனர். தொடர்ந்து சிறுதொண்ட நாயனாரின் அன்னம் படைப்பு வெகுவிமரிசையாக நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்க்கு ஆட்-பட்டவர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருக்கல்யாண வைபோகம்

கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வ -நாதர் கோவிலில், முருகனுக்கு புதிதாக ஐம்-பொன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் உற்சவமூர்த்தி செய்யப்பட்டது. தொடர்ந்து சித்ரா பவுர்ணமியை ஒட்டி நேற்று, முதன்முதலாக திருக்கல்யாண வைபோக விழா நடந்தது. இதை ஒட்டி அருகிலுள்ள வள்ளலார் கோவிலில் இருந்து, 20க்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டு-களை,

கட்டளைதாரர்கள் கோவில் திருமண மண்டபத்-திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து முருகன் திருக்கல்யாண வைபோகம், விநாயகர் பூஜையுடன் தொடங்கி சிறப்பு யாகம், திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அறுசுவை உணவு பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் முருகன் சுவாமி ஊர்வலம், தம்மம்பட்டியின் முக்கிய வீதி-களில் சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us