ADDED : மார் 11, 2026 07:48 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:சட்டசபை
தேர்தலை முன்னிட்டு அதன் பாதுகாப்பு பணிகளை முன்கூட்டியே
திட்டமிட, மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், சென்னையில்
உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு கமாண்டோ விவேக் யாதவ்
தலைமையில், நவீன துப்பாக்கி ஏந்திய, 65 படை வீரர்கள், நேற்று கொடி
அணிவ-குப்பு நடத்தினர்.
அவர்களுடன் இடைப்பாடி இன்ஸ்பெக்டர் பேபி
தலைமையில், 15 போலீசாரும் பங்கேற்றனர். வெள்ளாண்டிவலசில்
தொடங்-கிய அணிவகுப்பு ஊர்வலம், நைனாம்பட்டி, பஸ் ஸ்டாண்ட் வழியே
சென்று, போலீஸ் ஸ்டேசனில் முடிந்தது.
