/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் உயிரியல் பூங்காவில் விதைப்பந்துகள் பதியம்

ADDED : டிச 14, 2025 05:55 AM
சேலம்,: உலக வன விலங்குகள் பாதுகாப்பு தினம், உலக மண்வள தினம், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ஆகியவற்றை ஒட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் தடய அறிவியல் பிரிவு, நாட்டு நல பணி திட்டம், இளம் இந்தியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் பல்வேறு நிகழ்வுகள், பல்கலை வேந்தர் கணேசன் வழி-காட்டுதல்படி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்டன.
கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, சேலம் மாவட்ட வனத்துறையின் உதவி வன பாது-காவலர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் செல்-வகுமார் பங்கேற்றார். முன்னதாக மண்வளம், மாசு சீர்கேட்டை வலியுறுத்தும் நோக்கில் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு உயி-ரியல் பூங்காவில் பதியப்பட்டன. விலங்குகள், அழிந்து வரும் விலங்குகள் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி, கல்லுாரி சார்பில் நாரை தத்தெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை, கல்-லுாரியின் தடயவியல் துறை பொறுப்பாளர் ராஜஸ்ரீ, நாட்டு நலப்ப-ணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், இளம் இந்தியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வரா, சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர் ரஞ்சிதா செய்திருந்தனர்.