ADDED : பிப் 12, 2026 04:45 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரி பாய் தெருவை சேர்ந்தவர் பிரபு, 27. பச்சப்பட்டி பிரதான சாலை, பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன், 22. கூட்டாளிகளான இரு-வரும், கடந்த ஜன., 13ல், குகையை சேர்ந்த ஹரிஷ் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி, 4,800 ரூபாயை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குபதிந்து, பிரபு, சபரிநாதனை கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே பிரபு மீது ஒரு வழிப்பறி வழக்கும், 2023ல், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதும், சபரி நாதன் மீது, 3 வழிப்பறி வழக்கும் நிலுலையில் இருப்பது தெரிந்தது.
அதேபோல் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தினேஷ், 36, என்பவர், கடந்த, 13ல் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மணிவண்ணனை வழிமறித்து தாக்கி, 2,500 ரூபாயை பறித்துக்கொண்டார். கிச்சிப்-பாளையம் போலீசார், தினே ைஷ கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தது.இந்த, 3 பேரும், தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர் போலீஸ் கமி-ஷனர் அனில்குமார்கிரி, நேற்று உத்தரவிட்டார். இதனால் அவர்கள், ஓராண்டுக்கு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்-டனர்.
