ADDED : மே 03, 2026 01:42 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், நெத்திமேட்டை சேர்ந்தவர் சண்முகவேல், 34. கூலித்தொழிலாளி. அவரது மனைவி கவுசல்யா, 34. இவர்களுடைய மூத்த மகன் வைத்தீஸ்வரன், 13, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படித்தார்.
பள்ளப்பட்டி போலீசாரால், வழிப்பறி வழக்கில் கைதான சண்-முகவேல், நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் கவுசல்யா, வீட்டுவேலை செய்து இரு மகன்களையும் படிக்க வைத்தார். ஆனால் வைத்தீஸ்-வரன் சரிவர படிக்காமல், அடிக்கடி மொபைலில் பப்ஜி கேம் விளையாடி வந்தார். இதுகுறித்து தாய் கண்டிக்கவே, விரக்தி அடைந்த வைத்தீஸ்வரன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கவுசல்யா தகவல்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
