/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கடும் குளிர்; வீட்டில் முடங்கிய மக்கள்
/
ஏற்காட்டில் கடும் குளிர்; வீட்டில் முடங்கிய மக்கள்
ஏற்காட்டில் கடும் குளிர்; வீட்டில் முடங்கிய மக்கள்
ஏற்காட்டில் கடும் குளிர்; வீட்டில் முடங்கிய மக்கள்
ADDED : டிச 16, 2025 08:01 AM

ஏற்காடு: ஏற்காட்டில், நேற்று அதிகாலை, 10.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதால், கடும் குளிர் நிலவியதால், மக்கள் அவதிப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த மாதம் முழுவதும் கடும் பனி மூட்டத்துடன் கூடிய, சாரல் மழை பெய்து வந்தது. இதனால் கடும் குளிரில் மக்கள் தவித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் ஏற்காட்டில் நிலவிய கடும் குளிர் லேசாக குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையில், ஏற்காட்டில் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு ஏற்காட்டில், 10.6 டிகிரி செல்ஷியல் வெப்பம் பதிவானதால், கடும் குளிர் நிலவியது. குளிரால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு வெயில் அடிக்க தொடங்கியது.
வெயில் அடித்த நிலையிலும், ஏற்காடு முழுவதும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது வருகிறது. ஏற்காட்டில் வழக்கத்தை விட, இந்த மாதம் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

