/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் கழிவுநீர் கலப்பு; தடுக்க மாணவியர் கோரிக்கை
/
ஏரியில் கழிவுநீர் கலப்பு; தடுக்க மாணவியர் கோரிக்கை
ஏரியில் கழிவுநீர் கலப்பு; தடுக்க மாணவியர் கோரிக்கை
ஏரியில் கழிவுநீர் கலப்பு; தடுக்க மாணவியர் கோரிக்கை
ADDED : நவ 22, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளியின், 8ம் வகுப்பு மாணவியர் யாழினி, ரூபாஸ்ரீ, ராகவி ஆகியோர், அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில், தலைவர் குணசேகரனிடம் நேற்று அளித்த மனு:'வானவில்' மன்ற போட்டிக்கு, 'நகர கழிவால் பாதிக்கப்படும் கிராமத்து ஏரி' என்ற தலைப்பில், பவளத்தானுார் ஏரியை கள ஆய்வு செய்தோம்.
நகர் பகுதியில் வெளியேறும் கழிவுநீர், அந்த ஏரியில் கலப்பதால் மாசுபட்டு ஆகாயத்தாமரைகள் சூழ்ந்துள்ளன. ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.