/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்கள் எதிர்க்காததால் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி தொடக்கம்
/
மக்கள் எதிர்க்காததால் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி தொடக்கம்
மக்கள் எதிர்க்காததால் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி தொடக்கம்
மக்கள் எதிர்க்காததால் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி தொடக்கம்
ADDED : டிச 05, 2024 07:39 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி, 2வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, துாய்மை பாரத இயக்கம் - 2.0 திட்டத்தில், 9.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அங்கு கடந்த செப்., 5, 25, நவ., 27ல், பணி மேற்கொள்ள
அதிகாரிகள் சென்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த செப்., 20, நவ., 30ல், நகராட்சி
அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று, தாரமங்கலம் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நகராட்சி பொறியாளர் பிரேமா
உள்ளிட்டோர், 2வது வார்டுக்கு சென்றனர். அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க-வில்லை. இதனால் இயந்திரங்கள்
மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்தது.