/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கால் தொடரும் ஆடுகள் உயிரிழப்பு; வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ADDED : பிப் 03, 2025 07:17 AM
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகாவில் தீவட்டிப்பட்டி அருகே நாதியான்காட்டுவளவில், விவசாயி சின்னத்தம்பியின், 8 ஆடுகளை, கடந்த ஜன., 24ல் சிறுத்தை கொன்றதாக, அவர் தெரிவித்தார். 28ல், தீவட்டிப்பட்டி அருகே நைனாக்காட்டில் விவசாயி கவுண்டப்பனின், 5 செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. 12க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன. 31ல், தீவட்டிப்பட்டி அருகே அல்லிமுத்து கொட்டாயில், தங்கமணி என்பவரது, 3 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.
ஆடுகள் இறந்த இடங்கள், பூசாரிப்பட்டி, அக்ரஹாரம், நைனாக்காடு ஆகிய பகுதிகள் அருகே, தேன்கல்கரடு உள்ளது. அந்த கரடு மலையில், 2024ல் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை, மக்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து மூக்கனுார், பெருமாள் கோவில், ஜோடுகுளி என பல்வேறு பகுதிகளில் ஆடுகள், மாடு, நாய் இறப்புகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து சிறுத்தையின் உருவம் வனத்துறை கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.
இந்நிலையில் பூசாரிப்பட்டியை சுற்றி மட்டும், 2 வாரங்களில், 15 ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும் பல ஆடுகள் காயம் அடைந்தன. ஆனால் வனத்துறையினர் நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால் விவசாயிகள் ஆடுகள் பலியாவது தொடர்வதால், டேனிஷ்பேட்டை வனத்துறையினர், உண்மையில் என்ன விலங்கு என்பதை கண்டறிய வேண்டும் என, வலியுறுத்தினர். மேலும், வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வருவாய்த்துறையினர் மூலம் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.