ADDED : நவ 27, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி துறை சார்பில் தேசிய தன்னார்வ ரத்த தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. டீன் தேவி மீனாள் தலைமை வகித்தார். அதில் ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து ரத்ததானம் அளித்தவர்கள், ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள், ரத்த வங்கி துறை உதவி பேராசிரியர் சசி, ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
