/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி சிறப்பு பஜனை வழிபாடு
/
ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி சிறப்பு பஜனை வழிபாடு
ADDED : அக் 02, 2025 02:03 AM
சேலம், சேலம் சூரமங்கலம், முல்லை நகர், ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலத்தில், சாய்பாபாவின் புண்ணிய திதியை ஒட்டி, நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் டிரஸ்ட் சார்பில் பஜனை வழிபாடு
நடந்தது.
கடந்த 25ல், கொடியேற்றத்துடன், ஆத்மஜோதி ஏற்றி, நாமஸ்மரணத்துடன் தொடங்கிய 7 நாள் புண்ணிய திதி, விஜயதசமி நாளான இன்று, (அக்.,2ல்) நிறைவு பெறுகிறது. அதையொட்டி,8:00 மணிக்கு மகா அபி ேஷகம், அலங்காரம் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் சாய் பஜனை, மதியம், 12:00 மணிக்கு ஆரத்தி, 1:00 மணிக்கு ஆத்ம ஜோதி தரிசனம் நடத்தப்பட உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஷீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மாலை, 4:00 மணிக்கு தரிசனம், 6:00 மணிக்கு துாப ஆரத்தி வழிபாடு, இரவு 7:00 மணிக்கு மாதவி லதாவின் கீர்த்தனை, 9:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சாய்பாபாவின் புண்ணிய திதியை ஒட்டி, நாள் முழுவதும்
அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, ஷீரடி
சாய் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.