/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சிவாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கட்சி துவங்கி காணாமல் போயினர்'
/
'சிவாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கட்சி துவங்கி காணாமல் போயினர்'
'சிவாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கட்சி துவங்கி காணாமல் போயினர்'
'சிவாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கட்சி துவங்கி காணாமல் போயினர்'
ADDED : செப் 23, 2024 03:16 AM
கெங்கவல்லி:
கெங்கவல்லி கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர் கூட்டம் நேற்று நடந்தது.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதா-வது:
அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இளைஞர், சார்பு அணிகளில் பொறுப்பு கொடுங்கள். நடிகராக இருந்த, எம்.ஜி.ஆருக்கு மன்றம் இருந்தது. மன்றம் வைத்திருந்த நடிகர் எம்.ஜி.ஆர்., மட்டுமே தமிழக முதல்வராக வர முடிந்தது. சிவாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்கள், கட்சி தொடங்கி காணாமல் போய்விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, கிழக்கு ஒன்றிய செயலர் ராஜா, பேரூர் செயலர் இளவரசு உள்பட பலர் பங்கேற்றனர்.