தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.20 லட்சம் கொள்ளை

 துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.20 லட்சம் கொள்ளை

 துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.20 லட்சம் கொள்ளை


ADDED : செப் 12, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: மஹாராஷ்டிரா சென்ற சேலத்தை சேர்ந்த ஆடு வியாபாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மிரட்டி, 20 லட்சம் ரூபாய், 3 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக, அவர்களது குடும்பத்தினர், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக், 33, உட்பட, 10க்கும் மேற்பட்டோர், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனு:

என் தந்தை சேகர்,59. கடந்த, 40 ஆண்டாக, ஆடுகளை வாங்கி விற்று வருகிறார். ஆடு வாங்க, மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு என் தந்தை மற்றும் ரவிக்குமார், 55 உட்பட, 10 பேர், செப்., 10ல் லாரியில் சென்றனர்.

மறுநாள் அதிகாலை, மஹாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் மாடிகால் எனும் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தபோது, சாத்துாரில் லாரியை வழிமறித்த முகமூடி கும்பலை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், துப்பாக்கிச் சூடு நடத்தி, கொன்று விடுவதாக மிரட்டினர்.

தொடர்ந்து அவர்களிடம், 20 லட்சம் ரூபாய், 3.4 சவரன் நகைகள், மொபைல்போன்களை கொள்ளை அடித்தனர். மேலும், துப்பாக்கியால் தாக்கிவிட்டு, 'வெளியே சொன்னால் கொன்று விடுவோம்' என மிரட்டி தப்பியுள்ளனர்.

தற்போது என் தந்தை உட்பட, 10 பேர், அங்கிருந்து திரும்ப கூட பணமின்றி தவித்து வருகின்றனர். அதனால், போலீசார் விசாரித்து, கொள்ளை அடித்தவர்களை கண்டு பிடித்து, பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us