ADDED : ஆக 02, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
சேலம்:வேம்படிதாளம், மேல் அம்மாபாளையத்தில்
உள்ள செங்கோட்டையன் கோவிலில் நேற்று முன்தினம் மதியம், 40 வயது
மதிக்கத்தக்க ஒருவர், இரு வெள்ளி வேல்களை திருடிக்கொண்டு
ஓடியுள்ளார்.
இதுகுறித்து பூசாரி வையாபுரி அளித்த புகார்படி,
கொண்டலாம்பட்டி போலீசார், கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஓமலுார் அருகே பூமிநாயக்கன்பட்டி, செங்கனுாரை சேர்ந்தலட்சுமணன், 42, என தெரியவர, அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம்,
40,000 ரூபாய் மதிப்பில், 284 கிராம் கொண்ட இரு வெள்ளிவேல்களையும் பறிமுதல் செய்தனர்.
