தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.2.16 கோடி மதிப்பிலான வெள்ளி கொலுசு பறிமுதல்

 ரூ.2.16 கோடி மதிப்பிலான வெள்ளி கொலுசு பறிமுதல்

 ரூ.2.16 கோடி மதிப்பிலான வெள்ளி கொலுசு பறிமுதல்


ADDED : ஏப் 11, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 2.16 கோடி ரூபாய் மதிப்பிலான, 112 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் வடக்கு தொகுதி ஆனந்தா பாலம் அருகே பறக்கும் படையினர், ஏப்ரல் 10 ஆம் தேதி வாகன சோதனை செய்தனர். அப்போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பைகளில், 112 கிலோ வெள்ளி கொலுசுகள் இருந்தன.

விசாரணையில், கொலுசை எடுத்து வந்தவர், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் என்பதும், அவர் வெள்ளிப்பட்டறை வைத்திருப்பதும், அங்கு தயாரித்த கொலுசுகளை சென்னைக்கு எடுத்துச்செல்வதும் தெரிந்தது.

ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதனால் கொலுசுகளை பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் அதன் மதிப்பு, 2.16 கோடி ரூபாய் என்பதால், வருமான வரித்துறையினரும் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us