தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வெள்ளி பட்டறை ஊழியர் மொபைல் பேச்சுகள் ஆய்வு

வெள்ளி பட்டறை ஊழியர் மொபைல் பேச்சுகள் ஆய்வு

வெள்ளி பட்டறை ஊழியர் மொபைல் பேச்சுகள் ஆய்வு


ADDED : அக் 19, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடை சேர்ந்தவர் பாலசுப்ர-மணி, 58. இவரது வெள்ளி பட்டறைக்கு, கடந்த, 12ல், 'மங்கி குல்லா' அணிந்து வந்த, 4 பேர், காவலாளி வெங்கடேசனை தாக்கி, 15 கோடி ரூபாய் மதிப்பில், 600 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துச்சென்றனர். கேமராக்களை உடைத்து, அதன், 'டிஸ்க்'குகளை எடுத்துச்சென்ற நிலையில், 6 தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: நன்கு தெரிந்த நபர்கள் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். பட்டறை ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசா-ரணை நடக்கிறது. பட்டறை உரிமையாளர், அங்கு பணிபுரியும், 15 ஊழியர்களின் மொபைல் எண்களை வைத்து ஆய்வு செய்-கிறோம். கொள்ளை அடித்த நபர்கள் யாராவது பேசினரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. பட்டறை உரிமையாளரின் மொபைல் போனில், மொத்த ஆர்டர் குறித்து பேசியவர்கள், இச்-சம்பவத்தில் ஈடுபட்டனரா என்றும் விசாரணை நடக்கிறது. விரைவில் கொள்ளையர்களை பிடிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us