/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சார் - பதிவாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி
/
சார் - பதிவாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி
ADDED : செப் 28, 2025 02:18 AM
சேலம்:சேலத்தில், மண்டல அளவில் அனைத்து சார் - பதிவாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி, பதிவுத்துறை சார்பில் நேற்று நடந்தது. சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, பதிவு சட்டம் குறித்து எடுத்துரைத்தார். அரசு ஊழியர்கள், மக்களிடம், கனிவாக நடந்து நல்ல முறையில் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரவும் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன், சொத்துரிமை சட்டம், பாரதிய நியாய சன் ஹிதா பி.என்.எஸ்., சட்டம், பாரதிய சாட்சிய அதிநியம் சட்டம் பி.எஸ்.ஏ., குறித்தும் பேசினார்.
நாமக்கல் மாவட்ட பதிவாளர் சிவலிங்கம், புது கூட்டு மதிப்பு நிர்ணயம், பதிவுத்துறை அடுத்த கட்ட நகர்வான, 3.0 திட்டம் குறித்து தெளிவுபடுத்தினார். சேலம் மாவட்ட பதிவாளர் அருள் சரவணன், செந்தில்குமார், தர்மபுரி மாவட்ட பதிவாளர் வளர்மதி ஆகியோரும் பேசினர். சேலம் சார் - பதிவாளர் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.