UPDATED : டிச 20, 2025 07:00 AM
ADDED : டிச 20, 2025 06:59 AM

சேலம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால், சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், 3.62 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது, 26.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.,) கணக்கெ-டுப்பு பணி கடந்த நவ., 4ல் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகு-தியாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதி வாரியாக வாக்-காளர் விபரம்
தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்
கெங்கவல்லி(தனி) 1,03,325 1,08,251 7 2,11,583
ஆத்துார்(தனி) 1,07,273 1,13,273 22 2,20,568
ஏற்காடு(தனி) 1,29,442 1,34,265 17 2,63,724
ஓமலுார் 1,45,669 1,39,544 20 2,85,233
மேட்டூர் 1,24,277 1,21,303 16 2,45,596
இடைப்பாடி 1,35,654 1,31,693 27 2,67,374
சங்ககிரி 1,27,361 1,24,481 24 2,51,866
சேலம் மேற்கு 1,21,763 1,22,117 61 2,43,941
சேலம் வடக்கு 1,09,441 1,14,936 46 2,24,423
சேலம் தெற்கு 1,04,818 1,08,462 48 2,13,328
வீரபாண்டி 1,21,094 1,19,363 15 2,40,472
மொத்தம் 13,30,117 13,37,688 303 26,68,108

