ADDED : ஜன 16, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர், துாக்கனாம்பட்டி, எம்.எம்.சி., குடியிருப்பை சேர்ந்த, கூலித்தொழிலாளி சம்பத்குமார், 32. இவரது சகோதரி அருள்மொழி, 35. கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன் அருள்மொழிக்கும், சென்னையை சேர்ந்த ரத்தினம் என்பவருக்கும் திருமணமானது. அவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்னையால், கடந்த மாதம், 19ல் அருள்மொழி, சம்பத்குமார் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த, 21ல் கேக் வாங்க செல்வதாக புறப்பட்ட அருள்மொழி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், சகோதரியை கண்டுபிடித்து தரக்கோரி நேற்று சம்பத்குமார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருள்மொழியை தேடுகின்றனர்.

