/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காமலாபுரத்தில் மர்ம விலங்கு கடித்து ஆறு செம்மறி ஆடு பலி
/
காமலாபுரத்தில் மர்ம விலங்கு கடித்து ஆறு செம்மறி ஆடு பலி
காமலாபுரத்தில் மர்ம விலங்கு கடித்து ஆறு செம்மறி ஆடு பலி
காமலாபுரத்தில் மர்ம விலங்கு கடித்து ஆறு செம்மறி ஆடு பலி
ADDED : நவ 26, 2024 01:34 AM
ஓமலுார், நவ. 26--
ஓமலுார் அருகே, மர்ம விலங்கு கடித்து ஆறு ஆடுகள் உயிரிழந்தன. காயமடைந்த ஐந்து ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்
படுகிறது.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே காமலாபுரம் சிக்கிட்டியான் காடு பகுதியில் குடியிருந்து வருபவர் லட்சுமி, 55, விவசாயி. இவர், தனது வீட்டு அருகே பட்டி அமைத்து, 12 செம்மறி ஆடுகளை வளர்ந்து வருகிறார். மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு துாங்கச் சென்றுள்ளார்.
நேற்று காலை பார்த்த போது, வயிறு, கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன், ஆறு ஆடுகள் இறந்து கிடந்துள்ளன. ஐந்து ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. காமலாபுரம் கால்நடை மருத்துவர் கோபி, சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இறந்த ஆடுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' கடந்த சில தினங்களாக, இப்பகுதியில் ஆடுகள் கடிபட்ட நிலையில் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆடுகள் இறந்துள்ளது. இதற்கு நாய்கள் தான் காரணம்,'
என்றனர்.