ADDED : மே 08, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : திருவெம்பாவை பெருவிழா கழக டிரஸ்ட் சார்பில், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 21ம் ஆண்டு அறுபத்து மூவர் உலா நடக்க உள்ளது.இதற்கு வரும், 11 காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலை, 6:00 மணிக்கு, திருமுறை இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
12 காலை, 9:30 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், 10:45 மணிக்கு ஆன்மிக பேருரை, மாலை, 4:00 மணிக்கு சிறப்பு மேள கச்சேரி, 6:30 மணிக்கு அறுபத்து மூவர் திருவீதி உலா நடக்க உள்ளது.இதன் ஊர்வலம், முதல் அக்ரஹாரம், தேர்வீதி, இரண்டாம் அக்ரஹாரம், பட்டைக்கோவில், கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியே நடக்க உள்ளது.

