வரும் 11ல் திறன் மேம்பாட்டுமுறைவியல் பயிற்சி தொடக்கம்
வரும் 11ல் திறன் மேம்பாட்டுமுறைவியல் பயிற்சி தொடக்கம்
ADDED : மே 09, 2026 04:16 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்:சேலம் பெரியார் பல்கலை மேலாண்மை துறை அறிக்கை:பெரியார் பல்கலையில் சமூக அறிவியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த, வரும், 11 முதல், 20 வரை, முறைவியல் பயிற்சி நடக்க உள்ளது. இதில் ஆராய்ச்சி வடிவமைப்பு, அளவியல், தரவியல் முறைகள், தரவு சேகரிப்பு நுட்பங்கள், புள்ளி யியல் பகுப்பாய்வு, நவீன ஆய்வு கருவிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நாட்டின் பல்வேறு துறைகளில் அனுபவமிக்க நிபுணர்கள், பயிற்சியை நடத்தி, நவீன ஆராய்ச்சி நடைமுறைகள், வெளியீட்டு தர நிலைகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்து வழிகாட்டுவதன் மூலம், சமூக பிரச்னைகளுக்கு, அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க உதவும்.
