ADDED : ஜன 24, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலத்தில் ஓடும் காரில், கட்டுவிரியன் பாம்பு இருந்ததால், வாகன ஓட்-டிகள் அச்சத்துக்குள்ளாகினர்.
சேலம், மல்லுார் பகுதியை சேர்ந்தவர் விவசாயி அய்யனார். இவர் தனது ஆம்னி காரில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, சின்னகடை வீதிக்கு வந்துள்ளார்.காரின் பின்புறம் பைக்கில் வந்த நபர், காரில் பாம்பு இருப்பதாக சொல்லவே, காரை
ஓரமாக நிறுத்தினார். காரிலிருந்து இறங்கிய பாம்பு, கோட்டை மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி
காம்பவுண்ட் சுவர் அருகில் படுத்துக்கொண்டது.
தகவல் அளித்ததின் அடிப்படையில் வந்த, தீய-ணைப்பு வீரர்கள், கட்டுவிரியன் பாம்பை பிடித்து, வனப்பகுதிக்கு எடுத்து சென்றனர்.
