/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் பனி மூட்டம்; சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
/
ஏற்காட்டில் பனி மூட்டம்; சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
ஏற்காட்டில் பனி மூட்டம்; சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
ஏற்காட்டில் பனி மூட்டம்; சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
ADDED : டிச 31, 2024 07:38 AM
ஏற்காடு: ஏற்காட்டில், நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. சாலையில் நிறுத்திய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல் கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.
பனி மூட்டத்தால், ஏற்காடு முழுவதும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடும் குளிரால் தோட்டம், கட்டட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டினுள் முடங்கினர். கடும் பனிமூட்டம் சூழ்ந்ததால் சாலையில், 5 அடி துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முக்கிய சாலைகளின் ஓரத்தில், நிறுத்திவிட்டு சுற்றி பார்க்க சென்றனர். இதனால் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
.குறிப்பாக, ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உணவகம், மற்றும் சாக்லேட் கடைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்கு முறையான கார் பார்க்கிங் வசதி இல்லாததால் கடை முன்புறம் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையை பனி மூடியுள்ள நிலையில், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஏற்காடு போலீசார் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.