'மாற்று கருத்து இருந்தால் தான் சமுதாயம் முன்னேறும்'
'மாற்று கருத்து இருந்தால் தான் சமுதாயம் முன்னேறும்'
ADDED : பிப் 07, 2026 04:32 AM

சேலம்: ''மாற்று கருத்து இருந்தால்தான், சமுதாயம் முன்னேறும்,'' என, எம்.பி., தயாநிதி பேசினார்.
சேலம் வடக்கு தொகுதி தேவை என்ன என்பது குறித்து, தொங்கும் பூங்காவில், தி.மு.க., -எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சரு-மான தயாநிதி முன்னிலையில், 'தமிழகம் தலைகுனியாது' என்ற தலைப்பில் கலந்துரையாடல் மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
இதில் வணிகர்கள், பல்வேறு வியாபாரிகள் சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட அனைத்து தரப்பினர் தங்களது கருத்து-களை பதிவு செய்தனர்.
அதில், பாண்டுரங்கநாதர் பொதுப்பணி சங்க ஸ்தாபகர் கிருஷ்ண-மூர்த்தி பேசுகையில், ''டாஸ்மாக் மது கடையால் மாணவர்கள், இளைஞர்கள் கெட்டுபோய் விட்டதால், பல குடும்பங்கள் நிம்ம-தியாக இல்லை. எனவே, மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. அதற்கு போலீசார் துணை போகின்றனர். அதனால் மக்கள் ஆதரவு முழு-மையாக கிடைக்காது. இதையெல்லாம் சீர்திருத்தம் செய்யா-விட்டால், இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற முடி-யாது. நான் சொல்வது சிலருக்கு கசப்பாக இருக்கலாம்,'' என்றார்.
தொடர்ந்து தயாநிதி எம்.பி., பேசுகையில், ''இங்கு வருகை தந்-தவர்கள் பிரச்னைகளை பேசி, முழு ஆதரவு கிடைக்காது என கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லோரும் ஒரே மாதிரி பேசுவதென்றால் கருத்து கேட்பு தேவை-யில்லை. மாற்று கருத்து இருந்தால் தான், சமுதாயத்தில் முன்-னேற முடியும். உங்களுடைய கோரிக்கை, பிரச்னையை முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்,'' என்றார்.
மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்-திரன், மாநகர் செயலர் ரகுபதி, தொகுதி பார்வையாளர்கள் சுக-வனம், பார் இளங்கோ, விவேக் மற்றும் பலர்
பங்கேற்றனர்.
