ADDED : ஜூன் 13, 2026 02:54 AM
பனமரத்துப்பட்டி; திருச்சி, துவாக்குடியில் உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், சேலம் மாவட்டம் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலை-யத்தில், மண், நீர் வள பாதுகாப்பு தொழில்நுட்ப உத்திகள் குறித்த பயிற்சி நேற்று முன்தினம் நடந்தது.
அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி விஜயன், நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்தார்.
இணை பேராசிரியர் இளங்கவி, மண் பரிசோ-தனை குறித்து விளக்கினார். தொழில்நுட்ப உத-வியாளர் செந்தில்நாதன், வேளாண் உற்பத்தியை மேம்படுத்த மண் மற்றும் நீர்வள உத்திகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
பயிற்சி நிலைய இணை பேராசிரியர் வல்லரசன், மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் குறித்தும், உதவி பேராசிரியர் கிறிஸ்டல் கோரெட், வேளாண் இயந்திரங்கள், அரசு மானியத்தில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்-கினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்
அடைந்தனர்
